ஒரே இடத்தில்உங்கள் FACEBOOK நண்பர்களின் Mobile எண்களைபார்க்கவேண்டுமா?
சமூகவலைப் பின்னல்களில் முதன்மையான Facebook தளத்தைஇணையத்தில்உபயோகிக்காதவர்களே இல்லை என்றநிலை காணப்படுகிறதுஇதன்மூலம் உலகில் பல்வேறு இடங்களில், பல்வேறுதுறைகளில், பலவேறுபட்ட மனிதர்களின் நட்புக்கரங்களைநாம் எளிதில்பெற முடிகிறதுஅவர்கள் தங்களின் மொபைல் எண்களை தங்களது Profile பக்கத்தில்பகிர்கின்றனர். அவ்வாறு பகிரப்படும்அனைத்துநண்பர்களின்மொபைல் எண்களையும் ஒரேஇடத்தில நாம்காண முடியும்.. கணினியில்மட்டுமின்றி உங்கள் மொபைலில் இருந்தே இச்சேவையினைப் பெறலாம். இதற்காகநீங்கள்செய்யவேண்டியதுகொடுக்கப்பட்டஇணைப்பில்உங்களதுபயனர்பெயரையும்(username), கடவுச்சொல்லினையும்(password) உள்ளிட்டால்போதுமானது. A.pavusiya media
கல்லூரியில் நடத்தப்படும் பாடங்கள் உங்களுக்கு போர் அடிக்கிறதா? தொடர்ந்து அமர்ந்தவாறு அவற்றைக் கவனிக்க முடியவில்லையா?
உங்களுக்காகவே ஒன்லைனில் அனைத்து பாடங்களுக்குமான வீடியோ வகுப்பறைகள், பாடக் குறிப்புகள், அனிமேஷன் வழி பாடங்கள், படித்ததைச் சோதனை செய்து கொள்ள ஒன்லைன் தேர்வுகள், ஓடியோ உரைகள் என அனைத்து வழிகளிலும் கற்றுக் கொள்வதை உற்சாகப்படுத்தும் இணையத்தளம் ஒன்று இயங்குகிறது.
அறிவியல் பாடங்கள் அனைத்தும் புகழ்பெற்ற கல்வி நிலையங்களில் பாடம் நடத்தும் பேராசிரியர்களால் வீடியோ வகுப்பறைகளாகத் தரப்படுகின்றன.
Physics, Chemistry, Maths and Statistics, Biology, Medicine, Computer Science, Engineering, Accounting and Management, Dental Science, Nursing, History என ஏறத்தாழ அனைத்து பாடங்களும் இந்த தளத்தில் கிடைக்கின்றன.
இதில் ஒரு சில பாடங்களுக்கு அனிமேஷன் முறையிலும் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதனால் வேடிக்கையாக இந்த பாடங்களை விளக்கங்களுடன் கற்றுக் கொள்ளலாம்.
இது தவிர மாணவர்களின் அறிவை திறவை வளர்ப்பதற்காக ஒன்லைன் தேர்வும் நடத்தப்படுகிறது. பாடத்தை செய்முறை விளக்கமுடன் எளிய முறையில் கற்றுக் கொள்ள நினைக்கும் மாணவர்களுக்கு இத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உலகின் அதி வேக சுப்பர் கணனியை ( Super Computer ) கொண்ட நாடு என்ற பெருமை தற்போது அமெரிக்காவிடம் வந்து சேர்ந்துள்ளது.
அதிவேக சுப்பர் கணனியைக் கொண்ட நாடு என்ற பெருமை எப்பொழுதும் ஒரு நாட்டிடம் மட்டும் இருப்பதில்லை காரணம் சுப்பர் கணனிகள் தொடர்ச்சியாக மாற்றங்கள் மற்றும் மேம்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமையினாலாகும்.
குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்பெருமை ஜப்பானின் சுப்பர் கணனியான 'K' உலகின் அதிவேகமானது என்ற பெருமையைக் கொண்டிருந்தது.
அதற்கு சில காலங்களுக்கு முன்னர் சீனாவின் டியானி (Tianhe ) - 1 A உலகின் அதிகவேகக் கணனி என்ற பெருமையைப் பெற்றிருந்தது. சீன தேசிய பாதுகாப்புத் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தினாலேயே (National University of Defence Technology (NUDT) இக் கணனி உருவாக்கப்பட்டது.
இதன் அப்போதைய வேகம் 2.50 பெடாப்லொப்ஸ் (Petaflops) அதாவது ஒரு செக்கனில் 2,50 குவாட்ரில்லியன் கணிப்புக்களை மேற்கொள்ளக்கூடியது என்பதாகும்.
சீனாவின் டியானி ( Tianhe ) - 1 A ஆனது 88 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் உருவாக்கப்பட்டது. சுமார் 200 பொறியியலாளர்களால் 2 வருட கடும் உழைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. இது இயங்குவதற்கு மொத்தமாக 4.04 மெகாவோட்ஸ் மின்சாரம் தேவைப்படுகின்றது.
இக்கணனி, 14,336 இண்டெல் ஸியோன் சிபியுக்கள் (CPU ) மற்றும் 7,168 Nvidia Tesla M2050 ஜி.பி.யுக்களையும்( GPU - Graphics processing unit) அக் காலப்பகுதியில் கொண்டிருந்தது.
இதற்கும் முன்னர் அமெரிக்காவின் கிரே எக்ஸ்.டி5 ஜகுவார் Cray XT5 Jaguar, உலகின் அதிவேக சுப்பர் கணனியாக இருந்து வந்தது. இது அக்காலப்பகுதியில் 224,162 ஒப்டெரொன் (Opteron CPUs) சிபியுக்களைக்கொண்டிருந்ததுடன் அப்போதைய இதன் வேகம் 1.75 பெடாப்லொப்ஸ் (Petaflops) ஆகும்.
இந்நிலையில் உலகின் சுப்பர் கணனியைக் கொண்ட நாடு என்ற பெருமை மீண்டும் அமெரிக்காவிடம் வந்து சேர்ந்துள்ளது.
அமெரிக்காவின் ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வுகூடத்திலுள்ள டைடன் 'Titan Cray XK7' உலகின் தற்போதைய அதிவேக சுப்பர் கணனியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இது கிரே எக்ஸ்.டி5 ஜகுவார் (Cray XT5 Jaguar) சுப்பர் கணனியை மேம்படுத்தி உருவாக்கப்பட்டதாகும்.
டைடனானது 560,640 புரசசர்களயும், 261,632 NVIDIA K20x அக்ஸலேடர் கோர்களையும் (accelerator cores) கொண்டுள்ளது.
இதன் வேகம் 17.59 பெடாப்லொப்ஸாக கணிக்கப்பட்டுள்ளது. இது செக்கனில் 17.59 குவாட்ரில்லியன் கணிப்பீடுகளை மேற்கொள்ளக்கூடியது.
இதேவேளை உலகின் 2 ஆவது அதிகவேகக் கணனி என்ற பெருமையும் அமெரிக்காவுக்கே கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் லோரண்ஸ் லிவ்மோர் தேசிய ஆய்வுகூடத்தின் சிகோய்யா ' Sequoia' கணனியே இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதேவேளை 3 ஆவது இடத்தை ஜப்பானின் 'K' பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது