பிலைசு பாஸ்கல் 1642 ஆம் ஆண்டில் முதன் முதலில் பாஸ்கல் கணிப்பான் எனப்படும இயந்திர கணிப்பான் கண்டுபிடித்தார். .

கணினியை மையமாக கொண்ட துறை கணினியியல் ஆகும்.

அரித்மாமீட்டர்(Arithmometer) என்னும் இயந்திர கணிப்பான் உருவாக்கி அதன் மூலம் ...........

சார்ல்ஸ் பாபேஜ் முதலில் இயந்திர கணிப்பானை வ‍டிவமைக்க தொடங்கினார்,

எமது இணையத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். | Wel Come To Our WebSite and Share Our Sites

Sunday, July 6, 2014



கல்வி

                   கல்வி என்பது அறிவுநல்லொழுக்கம்நுட்பத் தகைமை என்பவற்றைக் கற்றலையும், கற்பித்தலையும் குறிக்கும். இது திறன்கள்தொழில்கள்உயர்தொழில்கள் என்பவற்றோடு, மனம், நெறிமுறைஅழகியல்என்பவை சார்ந்த வளர்ச்சியையும் இலக்காகக் கொண்டுள்ளது. முறைசார்ந்த கல்வியில், தொழில்முறை ஆசிரியர்கள் கற்பித்தலிலும், பயிற்சி கொடுப்பதிலும் ஈடுபடுவர். இது கற்பித்தல் நுணுக்கங்களையும், பாடத்திட்டத்தையும் உள்ளடக்கியிருக்கும். ஒரு சுதந்திரமான கல்வி மரபில், ஆசிரியர்கள் தமது பாடங்களுக்காகப் பல துறை அறிவையும் பயன்படுத்துவர். உளவியல்மெய்யியல்தகவல் தொழில்நுட்பம்,மொழியியல்உயிரியல்சமூகவியல் என்பன இவற்றுள் அடங்கும்.                                               வானியற்பியல்சட்டம்விலங்கியல்போன்ற சிறப்புத் துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், குறுகிய அறிவுத்துறை சார்ந்த பாடங்களையே கற்பிப்பர். இவர்கள் பெரும்பாலும் உயர் கல்வி நிறுவனங்களில் பணிபுரிவர். குறிப்பிட்ட சில திறன்களைக் கற்க விரும்புபவர்களுக்காகச் சிறப்புக் கல்விநெறிகளும் உண்டு. வானூர்தி ஓட்டுனர் பயிற்சி போன்றவை இத்தகைய கல்விநெறிகளுக்கு எடுத்துக்காட்டு ஆகும். தவிர முறைசாராக் கல்வி வாய்ப்புக்களும் பல உள்ளன. இந்த வகையில் அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு அருங்காட்சியகங்கள்நூல்நிலையங்கள்போன்றவை உதவுகின்றன. இதற்காகவே இத்தகைய நிறுவனங்கள் சமுதாயத்தின் மானியங்கள் மூலம் நடத்தப்படுகின்றன. தொழில் செய்யும்போது பெற்றுக் கொள்ளும் அனுபவக் கல்வி உட்பட, ஒருவர் தன் வாழ்க்கைக் காலத்தில் பெறும் பட்டறிவும் முறைசாராக் கல்வியுள் அடக்கம்.



A.pavusiya

Saturday, June 28, 2014

ஒரே இடத்தில் உங்கள் FACEBOOK நண்பர்களின் Mobile எண்களை பார்க்க வேண்டுமா?

தொழில்நுட்பம் தகவல் மையம்

ஒரே  இடத்தில் உங்கள்  FACEBOOK  நண்பர்களின்  Mobile  எண்களை  பார்க்க வேண்டுமா?

சமூக   வலைப் பின்னல்களில்  முதன்மையான  Facebook   தளத்தை இணையத்தில்  உபயோகிக்காதவர்களே  இல்லை  என்ற  நிலை  காணப்படுகிறது இதன்  மூலம்  உலகில்  பல்வேறு  இடங்களில்பல்வேறு துறைகளில்,  பலவேறுபட்ட  மனிதர்களின்  நட்புக்கரங்களை  நாம்  எளிதில்  பெற  முடிகிறது  அவர்கள்  தங்களின்  மொபைல்  எண்களை  தங்களது  Profile பக்கத்தில் பகிர்கின்றனர்அவ்வாறு  பகிரப்படும்  அனைத்து  நண்பர்களின் மொபைல்  எண்களையும்  ஒரே  இடத்தில  நாம்  காண  முடியும்.. கணினியில் மட்டுமின்றி  உங்கள்  மொபைலில்  இருந்தே  இச்சேவையினைப்  பெறலாம்இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது கொடுக்கப்பட்ட இணைப்பில் உங்களது பயனர் பெயரையும்(username), கடவுச்சொல்லினையும்(password) உள்ளிட்டால் போதுமானது.                                                                                              A.pavusiya media



Thursday, June 26, 2014

கணினியியல்




கணினியை  மையமாக  கொண்ட  துறை  கணினியியல்  ஆகும். கணினி கணினி  வன்  பொருள், மென் பொருள், கணினியின்  பயன்பாடுகள், கணிமையின்  அடிப்படைகள்  என  கணினியை  மையமாக  கொண்ட பல உட்துறைகளை ஒருங்கே இச் சொல் குறிக்கிறது. அதன்  துணை தத்துவார்த்த மற்றும்   நடைமுறை  துறைகளில்  பல்வேறு  வகையாக  பிரிக்கலாம்.




கணினி  அறிவியலின்  அடித்தளங்களாக  நவீன கால  எண் முறை  கணினி (Digital Computer) கண்டு பிடிப்புக்கு  முந்தியவைகளான  எண் சட்டம்  போன்றவற்றை கூறலாம்.   ஆனால் அவை பெரும்பாலும்   மனித  சக்தியை  அடிப்படையாக கொண்டு  இயங்கின.

பிலைசு பாஸ்கல்   1642 ஆம்  ஆண்டில்  முதன் முதலில்  பாஸ்கல்  கணிப்பான்  எனப்படும  இயந்திர  கணிப்பான்  கண்டுபிடித்தார்.  . இருநூறு ஆண்டுகளுக்கு  பிறகு  சார்லச்சு  சேவியர்  தாமஸ் (Charles Xavier Thomas) அலுவலக  பயண்பாட்டிற்க்கான  நம்பத்தகுந்த  அரித்மாமீட்டர்(Arithmometer) என்னும்   இயந்திர கணிப்பான்  உருவாக்கி  அதன்  மூலம்  இயந்திர கணிப்பான்  தயாரிப்பில்  முன்னோடியாக  விளங்கினார்.



சார்ல்ஸ்  பாபேஜ்  முதலில்  இயந்திர  கணிப்பானை   டிவமைக்க தொடங்கினார்,  1882ல் அவரின்  வித்தியாசப்  பொறியின்  கண்டுபிடிப்பு  அவருக்கு  பகுப்புப்  பொறி  எனப்படும்  நிரலாக்க  இயந்திர  கணிப்பானை உருவாக்க  தூண்டியது .]. 1834 ஆம்  ஆண்டு  முதல்  இந்த  இயந்திரம்  வளரத் தொடங்கியது, மேலும்  இரண்டே  ஆண்டுகளில்  அவர்  நவீன  கணினியின் சிறப்புக் கூறுகளை  தெளிவுபடுத்தினார்ஜெக்கார்டு தற] மூலம்  துளை  அட்டை முறைகளை   கண்டறிந்து அதன்  மூலம்  எண்ணற்ற  நிரலாக்கம் செய்வதற்கான  வழி  கணினியியலில்  மிகப்பெரிய  அடுத்த  படியாக இருந்தது

1843 ஆம்   ஆண்டு  அடா லவ்லேஸ்  வித்தியாசப்  பொறியை  பிரெஞ்சு மொழியில்  மொழி பெயர்க்கும்  பொழுது  பெர்னோளி  என்கள்  கணக்கீடு செய்வதற்க்கான  படி முறைத்  தீர்வை  எழுதினார்இதுவே  முதல் கணிப்பொறி  நிரலாக  கருதப்படுகிறது.

1885 ஆம்  ஆண்டு  வாக்கில்  ஹெர்மன்  ஹோலரித்  என்பவர்  புள்ளி விவர தகவல்  செயல்படுத்த  துளை  அட்டைகள்  பயன்படுத்தி  பட்டியலாக்கியை கண்டுபிடித்தார்  1924ல்  இவருடைய  நிறுவணம்  ஐபிஎம்  நிறுவணமாக மாறியது. சார்ல்ஸ் பாபேஜ்  இயந்திர  கணிப்பானை  டிவமைத்து  நூறு  வருடம்  கழித்து அவார்டு அயிக்கன்  என்பவர்  ஆர்வர்டு மார்க்  I பெரிய  நிரல் படு  கணிப்பானை ஐபிஎம்   நிறுவனத்திற்க்கு டிவமைத்து  காட்டினாஇது  சார்ல்ஸ் பாபேஜின் பகுப்புப்  பொறியை   சார்ந்து  அமைக்க பெற்றிருந்ததுபலர்  இதன்  மூலம் சார்ல்ஸ் பாபேஜின்  கணவு  நினைவானதாக  கூறினர்

1940களி்ல்  பல  வகை  சக்தி  வாய்ந்த  கணிப்பான்கள்  வலம்  வரத் தொடங்கியபோது "கணினி" (computer) என்ற  சொல்  இயந்திரங்களுக்கு இனையாக  அழைக்கப் பெற்றது.  . கணிதத்துறையைத்  தாண்டி  வெகுவாக கணினிகளை  பயன்ப்படுத்த  முடியும்  என்ற  எண்ணம்  மேலோங்க ஆரம்பித்தவுடன்  கணினியியல்  வேகமாக  வளர   ஆரம்பித்ததுகணினியியல் அல்லது  கணினி  அறிவியல்  1950 மற்றும்  1960 களின்  தொடக்கத்தில்  ஒரு தனித்துவமான  கல்வி  ஒழுக்கமாக  நிறுவப்பட  தொடங்கியது. உலகின்  முதல் கணினி  அறிவியல்  பட்டம்  திட்டம்  1953  ஆம்  ஆண்டு  கேம்பிரிட்ச்சு பல்கலைக்கழகத்தில்  தொடங்கியது.

கணினியியல்  ஓரு  படிப்பிற்க்கான துறையாக  இருக்கும்  என்று  நம்ப  மறுத்த நிலையில்  1950க்கு  பின்பு  அனைவரிடமும்  கணினியியல்  துறை  நல்ல வரவேற்ப்பை  பெற்றது.

ஒரு  சாதாரண  கல்வி  துறையாக  வரலாற்றை  கொண்ட  போதிலும்கணினி அறிவியல்  துறை  அறிவியல்  மற்றும்  சமூகத்திற்க்கு  நிறைய  பங்களிப்பு செய்துள்ளது. தொழிற்  புரட்சி (1750-1850 CE) மற்றும்  விவசாய புரட்சி (8000-5000 கி.மு.) க்கு பிறகு பின்  மனித   தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியது தகவல் புரட்சி எனலாம்.

தற்க்கால  தகவல்  காலம்  மற்றும்  இணையத்தை  உள்ளடக்கிய  எண்ணிமப் புரட்சி.
நிரலாக்க  மொழி  ஒரு  கருவியாக  பல் வேறு  மட்டங்களில்  செயல் முறை தகவல்களை  து ல்லியமாக  வெளியிடுவதற்க்காகவும்  சுருக்கமாக பயண்படுத்தவும்  வழிவகை  உருவானது]
மறையீட்டியலில் எனிக்மா  குறியீட்டை  குறிவிலக்கு  செய்தது  இரண்டாம் உலக  போரில்  நேச நாடுகள்  வெற்றி  பெற  ஒரு  முக்கியமான  காரணியாக இருந்த
அறிவியல்  கணிமை  நடைமுறை  செயல் முறைகள்  மற்றும்  பெரும் சிக்கலான  சூழ்நிலைகளில்  மதிப்பீடு , அத்துடன்  பரிசோதனைகளை முற்றிலும்  மென்பொருள்  மூலம்  செயல்படுத்த  உதவியது.
அறிவியல்  கணிமை  மூலம்  மனம்  தொடர்பான  ஆய்வு  மற்றும் மரபணுத் தொகுதி  பகுப்பாய்வுக்கான  முகப்புதல்களை செய்வதற்க்கு மனித மரபணுத் தொகைத்  திட்டம்  பயன் பட்டது


படி முறையியல்  வர்த்தகம்  பெரிய  அளவில்  செயற்கை  நுண்ணறிவு, இயந்திர  கற்றல் , புள்ளியியல்  மற்றும்  எண்  நுட்பங்களை  பயன்படுத்தி  நிதி சந்தைகளின்  திறன்   எளிதில்  பணமாக்கக்கூடிய  தன்மையை அதிகரித்துள்ளது                     A.pavusiya media

மாணவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம் - Free Education Online

கல்லூரியில் நடத்தப்படும் பாடங்கள் உங்களுக்கு போர் அடிக்கிறதா? தொடர்ந்து அமர்ந்தவாறு அவற்றைக் கவனிக்க முடியவில்லையா? உங்களுக்காகவே ஒன்லைனில் அனைத்து பாடங்களுக்குமான வீடியோ வகுப்பறைகள், பாடக் குறிப்புகள், அனிமேஷன் வழி பாடங்கள், படித்ததைச் சோதனை செய்து கொள்ள ஒன்லைன் தேர்வுகள், ஓடியோ உரைகள் என அனைத்து வழிகளிலும் கற்றுக் கொள்வதை உற்சாகப்படுத்தும் இணையத்தளம் ஒன்று இயங்குகிறது. அறிவியல் பாடங்கள் அனைத்தும் புகழ்பெற்ற கல்வி நிலையங்களில் பாடம் நடத்தும் பேராசிரியர்களால் வீடியோ வகுப்பறைகளாகத் தரப்படுகின்றன. Physics, Chemistry, Maths and Statistics, Biology, Medicine, Computer Science, Engineering, Accounting and Management, Dental Science, Nursing, History என ஏறத்தாழ அனைத்து பாடங்களும் இந்த தளத்தில் கிடைக்கின்றன. இதில் ஒரு சில பாடங்களுக்கு அனிமேஷன் முறையிலும் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதனால் வேடிக்கையாக இந்த பாடங்களை விளக்கங்களுடன் கற்றுக் கொள்ளலாம். இது தவிர மாணவர்களின் அறிவை திறவை வளர்ப்பதற்காக ஒன்லைன் தேர்வும் நடத்தப்படுகிறது. பாடத்தை செய்முறை விளக்கமுடன் எளிய முறையில் கற்றுக் கொள்ள நினைக்கும் மாணவர்களுக்கு இத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உலகின் வேகமான அதி வேக சுப்பர் கணனி அமெரிக்காவிடம்!

உலகின் அதி வேக சுப்பர் கணனியை ( Super Computer ) கொண்ட நாடு என்ற பெருமை தற்போது அமெரிக்காவிடம் வந்து சேர்ந்துள்ளது. அதிவேக சுப்பர் கணனியைக் கொண்ட நாடு என்ற பெருமை எப்பொழுதும் ஒரு நாட்டிடம் மட்டும் இருப்பதில்லை காரணம் சுப்பர் கணனிகள் தொடர்ச்சியாக மாற்றங்கள் மற்றும் மேம்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமையினாலாகும். குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்பெருமை ஜப்பானின் சுப்பர் கணனியான 'K' உலகின் அதிவேகமானது என்ற பெருமையைக் கொண்டிருந்தது. அதற்கு சில காலங்களுக்கு முன்னர் சீனாவின் டியானி (Tianhe ) - 1 A உலகின் அதிகவேகக் கணனி என்ற பெருமையைப் பெற்றிருந்தது. சீன தேசிய பாதுகாப்புத் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தினாலேயே (National University of Defence Technology (NUDT) இக் கணனி உருவாக்கப்பட்டது. இதன் அப்போதைய வேகம் 2.50 பெடாப்லொப்ஸ் (Petaflops) அதாவது ஒரு செக்கனில் 2,50 குவாட்ரில்லியன் கணிப்புக்களை மேற்கொள்ளக்கூடியது என்பதாகும். சீனாவின் டியானி ( Tianhe ) - 1 A ஆனது 88 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் உருவாக்கப்பட்டது. சுமார் 200 பொறியியலாளர்களால் 2 வருட கடும் உழைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. இது இயங்குவதற்கு மொத்தமாக 4.04 மெகாவோட்ஸ் மின்சாரம் தேவைப்படுகின்றது. இக்கணனி, 14,336 இண்டெல் ஸியோன் சிபியுக்கள் (CPU ) மற்றும் 7,168 Nvidia Tesla M2050 ஜி.பி.யுக்களையும்( GPU - Graphics processing unit) அக் காலப்பகுதியில் கொண்டிருந்தது. இதற்கும் முன்னர் அமெரிக்காவின் கிரே எக்ஸ்.டி5 ஜகுவார் Cray XT5 Jaguar, உலகின் அதிவேக சுப்பர் கணனியாக இருந்து வந்தது. இது அக்காலப்பகுதியில் 224,162 ஒப்டெரொன் (Opteron CPUs) சிபியுக்களைக்கொண்டிருந்ததுடன் அப்போதைய இதன் வேகம் 1.75 பெடாப்லொப்ஸ் (Petaflops) ஆகும். இந்நிலையில் உலகின் சுப்பர் கணனியைக் கொண்ட நாடு என்ற பெருமை மீண்டும் அமெரிக்காவிடம் வந்து சேர்ந்துள்ளது. அமெரிக்காவின் ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வுகூடத்திலுள்ள டைடன் 'Titan Cray XK7' உலகின் தற்போதைய அதிவேக சுப்பர் கணனியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இது கிரே எக்ஸ்.டி5 ஜகுவார் (Cray XT5 Jaguar) சுப்பர் கணனியை மேம்படுத்தி உருவாக்கப்பட்டதாகும். டைடனானது 560,640 புரசசர்களயும், 261,632 NVIDIA K20x அக்ஸலேடர் கோர்களையும் (accelerator cores) கொண்டுள்ளது. இதன் வேகம் 17.59 பெடாப்லொப்ஸாக கணிக்கப்பட்டுள்ளது. இது செக்கனில் 17.59 குவாட்ரில்லியன் கணிப்பீடுகளை மேற்கொள்ளக்கூடியது. இதேவேளை உலகின் 2 ஆவது அதிகவேகக் கணனி என்ற பெருமையும் அமெரிக்காவுக்கே கிடைத்துள்ளது. அமெரிக்காவின் லோரண்ஸ் லிவ்மோர் தேசிய ஆய்வுகூடத்தின் சிகோய்யா ' Sequoia' கணனியே இரண்டாவது இடத்தில் உள்ளது. இதேவேளை 3 ஆவது இடத்தை ஜப்பானின் 'K' பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது