பிலைசு பாஸ்கல் 1642 ஆம் ஆண்டில் முதன் முதலில் பாஸ்கல் கணிப்பான் எனப்படும இயந்திர கணிப்பான் கண்டுபிடித்தார். .

கணினியை மையமாக கொண்ட துறை கணினியியல் ஆகும்.

அரித்மாமீட்டர்(Arithmometer) என்னும் இயந்திர கணிப்பான் உருவாக்கி அதன் மூலம் ...........

சார்ல்ஸ் பாபேஜ் முதலில் இயந்திர கணிப்பானை வ‍டிவமைக்க தொடங்கினார்,

எமது இணையத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். | Wel Come To Our WebSite and Share Our Sites

Sunday, July 6, 2014



கல்வி

                   கல்வி என்பது அறிவுநல்லொழுக்கம்நுட்பத் தகைமை என்பவற்றைக் கற்றலையும், கற்பித்தலையும் குறிக்கும். இது திறன்கள்தொழில்கள்உயர்தொழில்கள் என்பவற்றோடு, மனம், நெறிமுறைஅழகியல்என்பவை சார்ந்த வளர்ச்சியையும் இலக்காகக் கொண்டுள்ளது. முறைசார்ந்த கல்வியில், தொழில்முறை ஆசிரியர்கள் கற்பித்தலிலும், பயிற்சி கொடுப்பதிலும் ஈடுபடுவர். இது கற்பித்தல் நுணுக்கங்களையும், பாடத்திட்டத்தையும் உள்ளடக்கியிருக்கும். ஒரு சுதந்திரமான கல்வி மரபில், ஆசிரியர்கள் தமது பாடங்களுக்காகப் பல துறை அறிவையும் பயன்படுத்துவர். உளவியல்மெய்யியல்தகவல் தொழில்நுட்பம்,மொழியியல்உயிரியல்சமூகவியல் என்பன இவற்றுள் அடங்கும்.                                               வானியற்பியல்சட்டம்விலங்கியல்போன்ற சிறப்புத் துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், குறுகிய அறிவுத்துறை சார்ந்த பாடங்களையே கற்பிப்பர். இவர்கள் பெரும்பாலும் உயர் கல்வி நிறுவனங்களில் பணிபுரிவர். குறிப்பிட்ட சில திறன்களைக் கற்க விரும்புபவர்களுக்காகச் சிறப்புக் கல்விநெறிகளும் உண்டு. வானூர்தி ஓட்டுனர் பயிற்சி போன்றவை இத்தகைய கல்விநெறிகளுக்கு எடுத்துக்காட்டு ஆகும். தவிர முறைசாராக் கல்வி வாய்ப்புக்களும் பல உள்ளன. இந்த வகையில் அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு அருங்காட்சியகங்கள்நூல்நிலையங்கள்போன்றவை உதவுகின்றன. இதற்காகவே இத்தகைய நிறுவனங்கள் சமுதாயத்தின் மானியங்கள் மூலம் நடத்தப்படுகின்றன. தொழில் செய்யும்போது பெற்றுக் கொள்ளும் அனுபவக் கல்வி உட்பட, ஒருவர் தன் வாழ்க்கைக் காலத்தில் பெறும் பட்டறிவும் முறைசாராக் கல்வியுள் அடக்கம்.



A.pavusiya